யாழ்.மாநகர முதல்வராக இருந்த வி.மணிவண்ணன், தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில், புதிய முதல்வரை தெரிவு செய்வதற்கு, மாநகர கட்டளைச் சட்டம் இடம்கொடுக்காது என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார். மாநகர சபையை கலைப்பது தொடர்பான அதிகாரம் தனக்கு இல்லையென்றும் அது தொடர்பில், சட்டமா அதிபரிடம் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.