மதுபானம் மற்றும் புகையிலை பாவனை மற்றும் அதனுடன் தொடர்புடைய வர்த்தகங்களை ஒழுங்குபடுத்துதல், அதற்கான உரிமங்கள் வழங்குதல் மற்றும் வரிகளை விதித்தல் ஆகியவற்றுக்கான மதுவரி கட்டளைச் சட்டம் 1912 இல் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து, தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப தொடர்புடைய கட்டளையை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய மதுவரி சட்டமூலத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவு 2022 இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டது, தற்போது புதிய சட்டமூலத்தை உருவாக்குவதற்கு சட்ட வரைவாளர்களை வழிநடத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.