ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி 25ஆவது நாளாக கொழும்பில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் பிரதமர் பதவி விலகினாலும் புதிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தரப்பில் பிரதமர் ஒருவர் நியமிக்கப்படமாட்டார் என முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பௌத்த நாயக்கர்களின் அறிவுறுத்தலின்படி, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் தான் பதவி விலகப் போவதில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.