இலங்கை புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தமது பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் யூ.கே.கொந்தசிங்க தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
என்ஜின் சாரதிகள் தொழிற்சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக இன்று (பிப். 13) பல திட்டமிடப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, இன்று காலை அலுவலக ரயில்கள் உட்பட பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, மஹோவில் இருந்து கொழும்பு மற்றும் மொரட்டுவை பிரதான ரயில் பாதையில் இயங்கும் விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இன்று காலை பிரதான ரயில் பாதையில் பல அலுவலக ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
இதேவேளை, கரையோரப் பாதையில் ஹிக்கடுவையில் இருந்து மருதானை வரை இயக்கப்படும் அலுவலக ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், காலியிலிருந்து மருதானை வரை கடற்கரையோரப் பாதையில் இயங்கும் சமுத்திரதேவி வழமை போன்று இயங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.