இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை மகிழ்விப்பது மட்டுமே குறிக்கோளாக வைத்து இருக்கும் நம்ம இன்ஸ்டா குயின் ஷிவானி நாராயணனை ரசிகர் ஒருவர் கிண்டலடித்து கடுப்பாக்கி உள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்றவர்களில் ஷிவானி நாராயணனும் ஒருவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து கார்த்திக் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவரின் முறை பெண்ணாக நடித்திருந்தார்.
இணையத்தில் வளைத்து வளைத்து போட்டோ போட்ட ஷிவானி கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார். அந்த வீட்டில் குட்டி குட்டி டவுசருடன் அழகு பதுமையாக வலம் வந்த இவருக்கு இதன் மூலம் கணிசமான ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார் ஷிவானி நாராயணன். தற்போது பம்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் இணைந்தும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இணையத்தில் வளைத்து வளைத்து ரீல்ஸ்,கிளாமர் போட்டோவை போடும் நடிகை ஷிவானி நாராயணன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் ஒரு ரசிகர் உங்களைப் பார்த்தா 23வது பெண் போல தெரியவே இல்லை என கேட்டுள்ளார். இதற்கு அந்த ரசிகரிடம் செல்லமாக கோபித்துக்கொண்ட ஷிவானி, 23 வயசு இல்லீங்க 22 தான் ஆகுது என பதிலளித்துள்ளார். மேலும், ஒரு ரசிகர் பிளாஸ்டிக் சர்ஜரி மூஞ்சி என பங்கமாக கிண்டலடித்துள்ளார். இந்த கேள்வியால் கடுப்பான ஷிவானி எனக்கு நீங்க தான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்றீங்களா? என்றும் ஒருத்தரை பற்றி தெரியாமல் அவங்களை பற்றி தேவையில்லாமல் வார்த்தைகளை விடாதீங்க என்று கோபமாக பதிலளித்துள்ளார். இது பழைய வீடியோவாக இருந்தாலும் ஷிவானியின் தீவிர ரசிகர்கள் யாருடா அது ஷிவானி செல்லத்தை கடுப்பாகியது என்று இப்போது வரை ஆறுதல் கூறி வருகின்றனர்.