பிலியந்தலை பிரதேசத்தில் வீடொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 73,940 ரூபாய் பணம் மற்றும் சீட்டுக்கட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
பொறிவைத்துப்பிடித்த பொலிஸார் கைது செய்யப்பட்டவர்களில் வீட்டின் உரிமையாளரான பெண், அவரது உறவினர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், வீட்டின் பிரதான வாயிலுக்கு அருகில் உளவு பார்ப்பதற்காக இருவரை நிறுத்திவைத்துவிட்டுஇந்த சூதாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் அறியாத வண்ணம் பொலிஸ் அதிகாரிகள் வீட்டின் பின்பக்க சுவர் வழியாக வீட்டுக்குள் சென்று சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸாரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.