பிறப்புச் சான்றிதழ் இல்லாத நபர்களுக்கு தேசிய அடையாள அட்டையை (NIC) வழங்குவதற்கான புதிய நடைமுறையை ஆட்கள் பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கமைய, இந்த நடவடிக்கை தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.