நேற்று (08) அதிகாலை 5.45 மணியளவில் தலவாக்கலை இந்து கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் கைக்குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
காலை நகரை சுத்தம் செய்ய வந்த தலவாக்கலை லிந்துலை நகரசபை ஊழியர்கள் சிறு குழந்தை அழும் சத்தம் கேட்டு முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் இருந்த குழந்தையை கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தினமும் இதே முச்சக்கர வண்டி கோவிலுக்கு அருகில் நிறுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது.
பிறந்து 12-14 நாட்களே ஆன சிசு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தலவாக்கலை பொலிஸ் அதிகாரியினால் குழந்தைக்கு தாய்ப்பாலை வழங்கி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்ததாகவும் தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.தலவாக்கலை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குழந்தை லிந்துலை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.