24 மணி நேர பயணத்தை மேற்கொண்டு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று சுவீடன் நாட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த பயணத்தை தொடர்ந்து அவர் பின்லாந்துக்கு செல்லவுள்ளார் என பி.பி.சி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நேட்டோ கூட்டணியில் சேரலாமா என்பது குறித்து இரு நாடுகளுடமும் கலந்துரையாடும் வகையில் அவரது இந்த விஜயம் அமைந்துள்ளது.
மேலும் குறித்த விஜயத்தின்போது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு ஐரோப்பாவின் நிலைப்பாடு பற்றி விவாதிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யுக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு, நேட்டோ கூட்டணியில் இணைவதற்கான ஆதரவு சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் அதிகரித்துள்ளது.