பிரித்தானியா மற்றும் வேல்ஸ் பகுதியில் திருமணத்திற்கான சட்டபூர்வ வயதில் இன்று முதல் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி16 அல்லது 17 வயதுடையோர் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதுடன், குறித்த வயதுடையோர் தனியாக வாழ்க்கை நடத்துவதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது பெற்றோரின் சம்மதத்துடன் நடந்தாலும், அது சட்டத்திற்கு புறம்பானதாகும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா மற்றும் வேல்ஸில் இன்று முதல் திருமண வயதை 18 என உயர்த்தியுள்ளனர். இதனால் அப்பாவி சிறார்கள் திருமண பந்தத்தில் வலுக்கட்டாயமாக சிக்க வைப்பது தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது திருமண வயதில் மாறுதல் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள நிலையில், இதில் எவரேனும் தவறிழைத்தால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும்.
இந்த புதிய சட்டத்திருத்தம் தொடர்பில் தொண்டு நிறுவனம் ஒன்று கருத்து தெரிவிக்கையில், குழந்தை திருமணம் தொடர்பான சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது அதில் இருந்து தப்பித்தவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என குறிப்பிட்டுள்ளனர்.மேலும், சிறார் திருமணங்களை ஊக்குவிக்கும் குடும்ப வழக்கத்திற்கு இது மாபெரும் பின்னடைவு எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் பிரித்தானியாவில் 64 சிறார் திருமணங்களை உரிய முறையில் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது போன்ற சட்டத்திருத்தம், அடையாளம் காணப்படுவதுடன் புகார் அளிக்கவும், இதனூடாக அப்பாவி பெண் பிள்ளைகள் திருமண பந்தத்தில் சிக்காமல் இருக்கவும் உதவும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
2021ல் மட்டும் 118 சிறார் திருமணங்களை அரசு சார்பு அமைப்புகள் தடுத்து நிறுத்தியுள்ளதுடன், தொடர்புடைய குடும்பங்கலுக்கு ஆலோசனைகளும் ஆதரவும் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.