Homeஉலகம்பிரித்தானியாவில் ஐந்து நாடுகளின் மக்கள் புலம்பெயர்தலில் சிக்கல்

பிரித்தானியாவில் ஐந்து நாடுகளின் மக்கள் புலம்பெயர்தலில் சிக்கல்

Published on

ஐந்து நாடுகளின் குடிமக்கள் புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி, அந்த நாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.

அந்த நாடுகள், டொமினிக்கா, ஹோண்டூராஸ், நமீபியா, திமோர் – லெஸ்தே மற்றும் வாநுவாட்டு ஆகிய ஐந்து நாடுகள் ஆகும்.

குறிப்பாக இந்த விசா கட்டுப்பாடுகள் புலம்பெயர்தல் மற்றும் எல்லை பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே என்று கூறியுள்ள உள்துறைச் செயலாரன சுவெல்லா பிரேவர்மேன், இந்த கட்டுப்பாடுகள் அந்த நாடுகளுடனான உறவு சரியில்லை என்பதற்கான அடையாளம் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் அனுப்பியுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில், டொமினிக்காவும் வானுவாட்டுவும் முதலீடு செய்வபர்களுக்கு குடியுரிமை வழங்குவது, புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்துவதை தெளிவாகக் காட்டுவதாக தெரிவித்துள்ளதுடன், அந்நாடுகள் பிரித்தானியாவுக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய நபர்களுக்கு குடியுரிமை வழங்கிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல, நமீபியா மற்றும் ஹோண்டூராஸ் ஆகிய நாடுகளிலிருந்து பிரித்தானியா வருவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாக தெரிவித்துள்ள பிரேவர்மேன், அந்நாட்டுக் குடிமக்களும் புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் திமோர் – லெஸ்தே குடிமக்களோ மோசடி செய்து பிரித்தானியாவில் வாழ முயல்வது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஏற்கனவே முறைப்படி பிரித்தானியா வர முன்பதிவு செய்துள்ளோர், மாற்றங்களுக்கு தயாராவதற்காக அவர்களுக்கு நான்கு வாரங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

19 அடி உயர அம்பேத்கர் சிலை:அமெரிக்காவில் அக்டோபர் 14ம் திகதி திறப்பு

அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவிலுள்ள மேரிலாண்டில் அக்டோபர் 14ம் திகதி திறக்கப்பட உள்ளது. இந்திய அரசியலமைப்பு...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் சமையல் எரிவாயு விலை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு...

உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு பிரதேசத்திலுள்ள கடற்கரையோரத்தில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று நேற்று (03.10.2023)காலை கரையொதுங்கியுள்ளதாக...

More like this