பிரித்தானியாவினால் விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது.
2019ஆம் ஆண்டை விடவும், 2022ஆம் ஆண்டில் பிரித்தானிய விசா பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவுக்கான புலம்பெயர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
தரவுகளின் அடிப்படையில், கல்விக்கான விசாவில் குடும்ப உறுப்பினர்களுடன் செல்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பிரித்தானியாவுக்கு பிரவேசிக்கும் சகலருக்கும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாது என புலம்பெயர் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில் 16 ஆயிரத்து 47 மாணவர்களுக்கும், 2022இல் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 788 மாணவர்களுக்கும் பிரித்தானிய வீசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.