இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் வடகிழக்கு பகுதிகளில் வாழும் பிரித்தானியர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் பனி எச்சரிக்கை விடுத்துள்ளது.உறையவைக்கும் சீதோஷ்ணம் காரணமாக ஸ்கொட்லாந்திலும் இங்கிலாந்திலும் பல மில்லியன் பிரித்தானியர்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்படலாம் எனவும், சாலை மற்றும் ரயில் சேவையும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மோசமான வானிலை திங்கட்கிழமை வரை நீடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.