அடுத்த மாதம் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கான நடுவர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர்களை பெயரிட சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த நடுவர்கள் பெயர் பட்டியலில் இலங்கையின் பிரபல நடுவரான குமார் தர்மசேனவும் இடம்பெற்றுள்ளார்.இந்த போட்டித் தொடருக்கு 16 நடுவர்கள் மற்றும் 4 போட்டி மத்தியஸ்தர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளதுடன், குமார் தர்மசேன மற்றும் இந்தியாவின் நிதின் மேனன் ஆகியோர் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.