பிரபல ஒடிசா நடிகர் பிந்து நந்தா. இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பின்னர் சினிமாவுக்கு வந்தார். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். பிந்து நந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்க பரிந்துரைத்தனர். ஆனாலும் உடனடியாக அவருக்கு மாற்று உறுப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர். இந்த நிலையில் அவருக்கு உறவினர் ஒருவர் கல்லீரல் தானம் அளித்தார். அதை பிந்து நந்தாவுக்கு மருத்துவர்கள் பொருத்தினர். ஆனாலும் ரத்தம் ஒவ்வாமை போன்ற சில காரணங்களால் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45.