திரைப்பட இயக்குநரும் நடன கலைஞருமான பிரபு தேவா இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இவர் நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சாம் ரொட்ரிகோஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கின்றார்.
குறித்த படத்திற்கான பாடல் காட்சியொன்றை பதிவு செய்வதற்கு பிரபுதேவா இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.