[tds_plans_description year_plan_desc="JTJGeWVhcg==" month_plan_desc="JTJGJTIwbW9udGg=" free_plan_desc="JUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUFGJUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIxJUUwJUFGJThEJUUwJUFFJUIxJUUwJUFGJTgxJUUwJUFFJUFFJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIwJUUwJUFFJUEzJTIwJUUwJUFFJTg1JUUwJUFFJUIxJUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUIyJUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJTg4JTIwJUUwJUFFJTg3JUUwJUFFJTk5JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFGJTgxJTIwJUUwJUFFJUFBJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJTlGJUUwJUFFJUIyJUUwJUFFJUJFJUUwJUFFJUFFJUUwJUFGJThELiUyMCVFMCVBRSVBRSVFMCVBRiU4NyVFMCVBRSVCMiVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSU5NSUyMCVFMCVBRSVCNSVFMCVBRSVCRiVFMCVBRSVBQSVFMCVBRSVCMCVFMCVBRSU5OSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRiU4MSUyMCUyMCUzQ2ElMjBocmVmJTNEJTIydGVsJTNBMDA0NC03NDQyNjgxOTM2JTIyJTNFJTIwMDA0NC03NDQyNjgxOTM2JTNDJTJGYSUzRQ==" vert_align="middle" color="#f9f9f9" horiz_align="content-horiz-center" links_color="#23fcf5" links_color_h="#224af9"]
Homeஉலகம்பிரபஞ்சத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு: ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்

பிரபஞ்சத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு: ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்

Published on

spot_img
spot_img

இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் அசுர வளர்ச்சி கண்டு எண்ணிலடங்கா கண்டுபிடிப்புக்களை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது

அந்த வகையில் பல்வேறு தொழிநுட்ப முறைகளை கையாண்டு பிரபஞ்சத்தில் ஏராளமான கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவைகளை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கிண்டாய் பல்கலைக்கழகத்தின் பாட்ரிக் சோபியா லிகாவ்கா,டோக்கியோவில் உள்ள ஜப்பானின் தேசிய வானியல் ஆய்வகத்தின் தகாஷி இடோ ஆகியோர் இணைந்து அண்மையில் நடத்திய ஆய்வில் இருந்து பூமியை போன்ற இன்னொரு கிரகத்தினை கண்டுபிடித்துள்ளனர்.

சூரிய குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள கைபர் பட்டை பகுதியில். பனிப் பொருட்கள் நிறைந்து காணப்படும் இடமாக கருதப்படுகிறது.

இது நெப்டியூனிற்கு மிக அருகில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பகாலங்களில் சூரிய குடும்பத்தில் இதுபோன்ற பல கோள்கள் காணப்பட்டதனால், இது ஒரு ஆதி கோளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளார்கள்.

கைபர் பெல்ட்டில் மில்லியன் கணக்கான பனிக்கட்டி பொருட்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அவை நெப்டியூனுக்கு அப்பால் அமைந்துள்ளதால் அவை டிரான்ஸ்-நெப்டியூனியன் பொருட்கள் என அழைக்கப்படுகிறது.

இவை சூரிய குடும்பத்திலிருந்து எஞ்சியவையாக நம்பப்படுகிறது, அத்துடன் இவை பாறைகள், உருவமற்ற கார்பன், நீர் மற்றும் மெதேன் போன்ற ஆவியாகும் பனிக்கட்டிகளின் கலவைகளால் உருவாகியுள்ளது.

இந்தப் பாறை மற்றும் பனி உடல்கள் சூரிய மண்டலத்தின் வெளிப்புற கிரக உருவாக்கத்தின் எச்சங்களாக இருக்கிறது என்றும், அருகில் உள்ள ஏதோ ஒரு பெரிய ஈர்ப்பு விசை இந்த பொருட்களினை ஈர்த்து, அவற்றுக்கு “விசித்திரமான சுற்றுப்பாதைகளை” வழங்குவதாகவும் ஆராய்ச்சி குழு தெரிவிக்கின்றது.

இந்தக் கிரகம் சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களில் இருந்தும் வேறுபட்டு காணப்படுவதுடன், அளவில் மிகவும் பெரியதாகவும் தொலைதூர சுற்றுப்பாதையில் இருப்பதாகவும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இந்த கிரகமானது சூரியக்குடும்பத்தின் சுற்றுப்பாதையிலேயே இருப்பதாகவும், சூரியனிலிருந்து நெப்டியூனைக் காட்டிலும் 20 மடங்கு தொலைவில் இது சுற்றி வருகிறது அனால் இன்று வரை சூரிய குடும்பத்தில் 09 கிரகங்கள் இருப்பதாக தான் கூறப்படுகிறது.இது பற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், 450 கோடி வருடங்களுக்கு முன்பு நமது சூரியன் தோன்றியது.

சூரியனின் உருவாக்கத்தின் போது அதனைச் சுற்றி சுழன்று கொண்டிருந்த தூசுக்களும் வாயுக்களும் விண்கற்களும் சூரியனின் ஈர்ப்பு விசையில் ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக சூரிய குடும்பத்திலுள்ள 9 கோள்களும் அதன் துணைக்கோள்களும் உருவானது.இப்படி நடந்த மோதலின் காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதிய அனைத்து பொருட்களும் கோள்களாக மாறவில்லை.

கோள்களாகமல் மீதம் இருந்த அனைத்தும் விண்வெளியில் மிதந்த வண்ணம் சூரியத் தொகுதியின் உள்ளே சிறுகோள் பட்டை எனும் பகுதியில் சூரியனைச் சுற்றி வலம்வந்து கொண்டிருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த சிறுகோள் பட்டை போன்று நெப்டியூன் கிரகத்திற்கு அப்பால் காணப்படும் சூரிய குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட விண்கற்களின் அமைப்பே கைபர் பட்டை ஆகும்.

கைபர் பட்டையில் உள்ள மிகப்பெரிய கோளான புளூட்டோ 1930-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டாலும் கைபர்பட்டையை விஞ்ஞானிகளால் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை.ஏனென்றால் புளூட்டோவைப் போன்று அதில் உள்ள ஏனைய பொருட்கள் எதுவும் சூரிய ஒளியை பிரதிபலிக்கவில்லை என்பதனாலாகும்.

தற்போது தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததன் காரணமாவே கைபர் பட்டை முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.இந்த கைபர் பட்டை பகுதியில்தான் பூமி போன்ற கிரகம் காணப்படுகிறது, இது தொடர்பாக ஆய்வு செய்யப்படவேண்டியது அவசியம்.

நாங்கள் கண்டுபிடித்திருப்பது எல்லோரும் கூறிவரும் 9-வது கிரகம் அல்ல, சூரிய குடும்பத்தின் எல்லையில் உள்ள கிரகத்தையே கண்டுபிடித்திருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.

சூரியனில் இருந்து இந்தக் கிரகம் சுமார் 200 வானியல் அலகு தொலைவில் உள்ளதாகவும், ஒரு வானியல் அலகு என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஜப்பான் விஞ்ஞானிகளின் இந்த தகவல் வானியல் அறிஞர்களின் அடுத்தகட்ட தேடுதலுக்கு தூண்டுகோலாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Latest articles

Beste Online Internet Casinos 2024: Meine Aktuelle Online Casino List

Beste Online Internet Casinos 2024: Meine Aktuelle Online Casino ListeVulkan Vegas Casino Erfahrungen 2024...

Комета казино

Интересные факты о казино Комета и его особенностяхВ этом разделе мы погрузимся в захватывающий...

Бонусы казино Комета, промо, турниры

Акции и привилегии казино Комета - бонусы, промоакции и турнирыВ мире развлечений, где сочетание...

Best Real Money On The Internet Casinos In Down Under 2024 Play In Au

Best Real Money On The Internet Casinos In Down Under 2024 Play In Au$Best...

More like this

Beste Online Internet Casinos 2024: Meine Aktuelle Online Casino List

Beste Online Internet Casinos 2024: Meine Aktuelle Online Casino ListeVulkan Vegas Casino Erfahrungen 2024...

Комета казино

Интересные факты о казино Комета и его особенностяхВ этом разделе мы погрузимся в захватывающий...

Бонусы казино Комета, промо, турниры

Акции и привилегии казино Комета - бонусы, промоакции и турнирыВ мире развлечений, где сочетание...