இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளார்.
அதில் பெரும்பான்மையை நிருபிப்பவர்களுக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராகவுள்ளதாக அவர் அறிவிப்பாரென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் புதிய பிரதமர் நியமனம் செய்யப்படும் வரை தானே பிரதமராக இருப்பாரென அவர் அறிவிப்பாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் எவ்வாறிருப்பினும் நாடு மேலும் பாதாளத்துக்கு செல்வதனை தடுப்பதற்காக, புதிய பிரதமர் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் தான் பதவி விலகப் போவதில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.