பிரதமர் அலுவலத்திற்கு மின்னஞ்சல் அனுப்பிய தஞ்சையை சேர்ந்த நபரிடம் ஒன்றிய அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பூண்டியை சேர்ந்த பிஎச்டி மாணவர் பிரதமர் அலுவலத்திற்கு அவதூறாக மின்னஞ்சல் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த மின்னஞ்சல் அடிப்படையில் பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த ஐபிஎஸ் அதிகாரிகள், பூண்டியிலுள்ள விக்டர் ஜேம்ஸ் ராஜா என்ற இளைஞரை கைது செய்து தஞ்சையில் உள்ள தனியார் அரசு கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து வந்த 9 அதிகாரிகள் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை கைது செய்து தஞ்சை அழைத்து வந்து என்ன மின்னஞ்சல் அனுப்பினார், எதற்காக அனுப்பினார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருவது தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.