குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் பேரீச்சை முக்கியமானது.
இது அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.
இதில் Vitamin A, B6, மக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு போன்ற சத்துக்களும், பாலில் புரோட்டீன், புரதச்சத்து, கல்சியம், கொழுப்புச்சத்து மற்றும் மாச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.
இதனை பாலில் ஊறவைத்து சாப்பிடுவது இன்னும் பல பயன்களை தரும்.
அந்தவகையில் தற்போது பேரீச்சம்பழத்தினை பாலில் ஊறவைத்து சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம் :
இரும்புச் சத்து பேரிச்சையில் உள்ள முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதமான ஹீமோகுளோபினின் உற்பத்திக்கு இன்றியமையாதது. இரத்தச் சோகையுடன் தொடர்புடைய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பேரிச்சை உதவுகிறது.
பசும் பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொண்டால், அது அவர்களுக்கு மட்டுமின்றி, கருவில் வளரும் குழந்தைக்கும் நல்லது. ஏனெனில் பேரிச்சம் பழம் மற்றும் பால் கலவையை தவறாமல் உட்கொள்வது கருவில் உள்ள குழந்தைக்கு உறுதியான எலும்புகள் மற்றும் அதிக அளவிலான இரத்தத்தை உருவாக்க வழி வகை செய்யும்.
பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழம் சருமத்திற்கு சிறந்தது. பாலில் ஊற வைத்த பேரிச்சையுடன் தேன் கலந்து, அதனை அரைத்து பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளவும். அந்த பேஸ்டை முகத்தில் பேக் போல இட்டுக் கொண்டு பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை அப்படியே விடவும்.
பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிடுவது ஒருவரின் ஆற்றலை அதிகரிக்க உதவும். பாலில் ஊற வைத்த பேரிச்சை ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் அடர்த்தியான உணவாக செயல்பட்டு உங்களின் ஆற்றல் அளவை அதிகரிக்கும்.