ஜப்பானிய சுற்றுலாப் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சந்தேகிக்கப்படும் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் அனுராதபுரம் சுற்றுலா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலா பயணியிடமிருந்து பெறப்பட்ட புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அனுராதபுரம் புனித நகருக்கு விஜயம் செய்த போது தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவர் கூறினார்.
சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று காலை அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.