அலவத்துகொட பொலிஸ் எல்லைக்குட்பட்ட துனுவில வடக்குப் பகுதியில் இன்று (25) காலை வீடொன்றின் மீது பாறை சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 18 வயது சிறுமியும் 15 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.
இந்த இரண்டு பிள்ளைகளின் தாய் மற்றும் தந்தை மற்றும் வீட்டில் இருந்த மற்றுமொருவரும் காயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதேசவாசிகள், அலவத்துகொட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை மீட்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஜம்புகஹபிட்டிய பிரஷிதேய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.