பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோரதுடுவ பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றை சுற்றிவளைத்த 31 சந்தேக நபர்களும் 10 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பாவனையுடன் விருந்தொன்று நடைபெறுவதாக பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது 8 சந்தேகநபர்கள், கஞ்சா வைத்திருந்த 2 பெண் சந்தேகநபர்கள், பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த 2 சந்தேகநபர்கள் வாக்குமூலத்தின் அடிப்படையில் 21 சந்தேகநபர்கள் மற்றும் விருந்தில் தங்கியிருந்த 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெஹிவளை, காலி, கலகெடிஹேன, பலாங்கொடை, இரத்தினபுரி, கல்கிஸ்ஸ, ஹெட்டிமுல்ல, கொழும்பு 15 மற்றும் களனி ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
இவர்கள் இன்று (பிப்ரவரி 5) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.