பாணந்துறை பின்வத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபரின் சடலம் இன்று காலை சொகுசு வாகனத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயர் சொகுசு ஜீப் வண்டியின் சாரதி இருக்கையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.