முன்னதாக முடிவு செய்தபடி அனைத்து அரசுப் பள்ளிகளும் திங்கள்கிழமை (ஏப்ரல் 17) திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில், இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை வழங்க மாட்டோம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.