தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த காலநிலை மாற்றம் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடசாலை பாடத்திட்டத்துடன் தொடர்புடைய பாடத்தை சேர்ப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் திருமதி பெட்ரிசியா ஸ்கொட்லண்டை பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து சந்தித்த போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கல்வித் துறையின் தற்போதைய போக்குகள் குறித்துக் குறிப்பிட்ட கல்வி அமைச்சர், சமீபத்தில் தொடங்கப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுக்கு அப்பால் விரைவான கல்வி மாற்றத்திற்கான ஆரம்ப நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஏற்கனவே எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
யுனெஸ்கோவின் அறிவுறுத்தல்களின்படி கல்வி மாற்றத்தின் அடித்தளமாக இருந்த கல்வியின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சர் திருமதி பாட்ரிசியா ஸ்காட்லாந்திடம் தெரிவித்தார்.