கண்டி – வத்தேகம பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையில் கண்டி – பன்வில பகுதிய சேர்ந்த 55 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாணவன் மாலையில் தனியார் பயிற்சி வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிய போது சந்தேகநபர் குறித்த மாணவனை ஏமாற்றி கொங்கிரீட் தயாரிக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முற்பட்ட நிலையில் மாணவன் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.