கொழும்பு – மஹரகம – நாவின்ன விஜேராம பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில், மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாவின்ன விஜேராம பகுதியில் உள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலையின் கட்டடம் ஒன்றின் சுவரே நேற்றைய தினம் இடிந்து வீழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த மாணவர் கொழும்பு தெற்கு போதனா, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.