நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை (20) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையை முன்னிட்டு ஜனவரி 23 ஆம் திகதி தொடக்கம் கடந்த 17 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய திங்கள் முதல் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி , மார்ச் 24 ஆம் தேதியுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டுக்கான இறுதி தவணை கல்வி நடவடிக்கைகள் மார்ச் 24 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளன.
மேலும், இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் தினம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணையின் இரண்டாம் கல்வி நடவடிக்கைகள் கடந்த 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்து 16 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இப்பாடசாலைகளில் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் மார்ச் மாதம் முதல் 21 ஆம் தேதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.