குருநாகலை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு இடையில் குழு மோதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மாணவர்கள் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நால்வரும் குருநாகலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நால்வருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக கருத்தப்படும் இரு தரப்பையும் சேர்ந்த மாணவர்கள் நால்வரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக குருநாகலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.
குருநாகலை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் அலுவலக அதிகாரிகள் குழுவினால் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.