Homeஇலங்கைபாடசாலைகளுக்கு மே 27 முதல் ஜூன் 11 வரை விடுமுறை

பாடசாலைகளுக்கு மே 27 முதல் ஜூன் 11 வரை விடுமுறை

Published on

பாடசாலைகளுக்கு இம்மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளுக்கு இன்று 13ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இக்காலப்பகுதியில் நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நிமித்தம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

பின்னர் மே மாதம் 25ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 20ஆம் திகதி வரையில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

இதன்படி மே மாதம் 29ஆம் திகதி இந்த பரீட்சைகள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட பாடசாலை விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டன.

இவ்வாறான பின்னணியில் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான முக்கியத் தீர்மானமொன்று கல்வி அமைச்சினால் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, இம்மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஏற்கனவே காலதாமதமாகியுள்ள கல்விப் பொதுத் தராதார சாதாரணத் தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி 29ஆம் திகதி நடைபெறுமா? என்ற சந்தேகம் பல்வேறு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைகள் விடைத்தால் மதிப்பீட்டு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்கான காரணம். இது குறித்து ஏற்கனவே பதிலளித்துள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, கண்டிப்பாக நிர்ணயிக்கப்பட்ட திகதியில் பரீட்சைகள் அரம்பமாகுமென்றும் அறிவித்துள்ளார்.

Latest articles

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...

பாடசாலை மைதானம் ஒன்றில் திடீரென தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ - பலுகொல்லாகம பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான உலங்கு வானூர்த்தி...

More like this