பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜரன்வாலா நகரில் கடந்த வாரம் மத நிந்தனையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள், வீடுகளை வன்முறை கும்பல் சூறையாடியது.
இதில் 21 தேவாலயங்கள்,200 வீடுகள் சேதமடைந்தன. ஒரு கல்லறையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 200 பேரை கைது செய்தனர். இந்நிலையில், இதில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ.6லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பஞ்சாப் இடைக்கால முதல்வர் மோஹ்சின் நக்வி தெரிவித்தார்.