செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது, கடும் தட்டுப்பாடு பாகிஸ்தானில் பெட்ரோல் நிலையங்களில் ...

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது, கடும் தட்டுப்பாடு பாகிஸ்தானில் பெட்ரோல் நிலையங்களில் மக்கள் அவதி.

Published on

spot_img
spot_img

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன் விளைவாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உச்சம் தொட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதானல் அங்கு ஏராளமான பெட்ரோல் நிலையங்களில் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கிராமப்புறங்களிலும், சிறிய நகரங்களிலும் எரிபொருள் தட்டுப்பாடு பல மாதங்களாக இருந்து வரும் நிலையில், தற்போது லாகூர், குஜ்ரன்வாலா, பைசலாபாத் உள்ளிட்ட மாநகரங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. லாகூரில் உள்ள 450 பெட்ரோல் நிலையங்களில் 70 பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதாகவும், மற்ற பெட்ரோல் நிலையங்களிலும் தொடர்ந்து பெட்ரோல் விற்கப்படுவதில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகியுள்ளனர். எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் முறையாக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை வினியோகம் செய்வதில்லை என பாகிஸ்தான் பெட்ரோலிய பொருட்களுக்கான வினியோகஸ்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இதனை மறுக்கும் எண்ணெய் நிறுவனங்கள், சிலர் எரிபொருள்களை பதுக்கி செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அதிக விலைக்கு விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Latest articles

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்…..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு…..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு…

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள்...

More like this