கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேருந்தில் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய மரதன்கடவல பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடிபோதையில் பேருந்திற்குள் நுழைந்த நபர் பாலியல் துஷ்பியோகத்திற்கு முயன்ற போது குறித்த பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.