செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாபழைய குற்றால அருவியில் அடித்து சென்ற ஹரிணி.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு.

பழைய குற்றால அருவியில் அடித்து சென்ற ஹரிணி.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு.

Published on

spot_img
spot_img

பழைய குற்றால அருவியில் குழந்தை ஒன்று நீரில் அடித்து செல்லப்பட்டபோது அந்த குழந்தையை இளைஞர் ஒருவர் துணிச்சலாக காப்பாற்றியதை அடுத்து அவரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் குடும்பத்துடன் பழைய குற்றால அருவிக்கு கடந்த 29ஆம் தேதி வந்தார். இவரது 4 வயது மகள் ஹரிணியை அருவிக்கரையில் அமர வைத்துவிட்டு பெற்றோர் குளித்துள்ளனர்.

பின்னர் அருவியின் முன்புறமுள்ள சிறிய தடாகத்தில் சிறுமி இறங்கினார். தடாகத்திலிருந்து ஆற்றில் தண்ணீர் விழுவதற்கு அமைக்கப்பட்டிருந்த குழாய் போன்ற ஓடை வழியாக சிறுமி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். சுமார் 50 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டார். இதனால் சிறுமி அலறி கூச்சலிட்டார். இதை பார்த்து பெற்றோரும் கூச்சலிட்டனர்.

நிறைய பேர் தண்ணீரில் செல்ல அஞ்சி சிறுமியை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறதபஉடனே அங்கு வந்த இளைஞர் ஒருவர் துணிச்சலாக பாறைகள் நிறைய ஆற்றின் பள்ளத்தில் வேகமாக இறங்கி சென்று ஹரிணியை பத்திரமாக மீட்டெடுத்தார். இதனால் லேசான காயத்துடன் சிறுமி உயிர் தப்பினார். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்த போது அழுதுக் கொண்டிருந்த பெற்றோர் சிறுமிக்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்தனர். அந்த இளைஞருக்கும் நன்றியை தெரிவித்தனர்.

சிறுமியை காப்பாற்றிய இளைஞர் விஜயகுமார், இவர் விளாத்திகுளம் போலீஸ் லைன் தெருவைச் சேர்ந்தவர். 27 வயதாகும் இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 29ஆம் தேதி சவாரியை ஏற்றிக் கொண்டு பழைய குற்றாலம் சென்றுள்ளார். அங்கு காலை 10 மணிக்கு காரை சுற்றுலா தலத்தின் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு குளிக்க சென்றார்.

அப்போது ஹரிணி தண்ணீரில் அடித்து செல்லப்படுவதை பார்த்து ஆற்றில் இறங்கி காப்பாற்றியுள்ளார். சிறுமி அழுது கொண்டே இருந்த நிலையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தென்காசி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தனது உயிரை துச்சமாக கருதி சிறுமியின் உயிரை துணிச்சலாக காப்பாற்றியது குறித்து பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் பழைய குற்றாலம் அருவியில் தவறி விழுந்த ஹரிணியை காப்பாற்றிய விளாத்திக்குளம் விஜயகுமாரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பாராட்டி சான்றிதழை வழங்கினார். விஜயகுமாரை போல் ஆபத்தில் இருப்போருக்கு உதவி செய்ய பலர் முன் வர வேண்டும் என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதே வேளை குழந்தை ஆற்றில் அடித்துச் செல்லும் போது இப்படி வேடிக்கை பார்ப்பதற்கு பதில் தீயணைப்பு துறைக்கு போன் செய்வது, அங்குள்ள போலீஸாரை அழைப்பது போன்ற செயல்களில் மக்கள் ஈடுபட வேண்டும் என்பதும் அனைவரின் கோரிக்கையாகும்.

Latest articles

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...

முதலாவது T/20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி T/20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது T/20...

More like this