பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் அவசரமாக அனுப்ப பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கு நீண்ட காலமாக வராத, நீண்ட கால விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் விவரங்கள் பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.
குறிப்பிட்ட கல்வித் துறை வெளியிட்ட சுற்றறிக்கை:
தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்து கீழ்காணும் விவரங்கள் கோரப்படுகின்றன.
1. நீண்ட கால விடுப்பில் உள்ளவர்கள்
2. நீண்ட காலமாக தகவலறிந்து பணிக்கு வராதவர்கள்
3. தொடர்ந்து விடுப்பில் உள்ளவர்கள்.(அடிக்கடி விடுப்பில் உள்ளவர்கள்).
மேற்காணும் விவரங்கள் மிகவும் அவசரம் என கருதி இணையவழி ([email protected]) மூலம் இவ்வியக்கத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பலர் பள்ளிக்கு வராமல் தொடர்ந்து நீண்ட காலமாக விடுப்பில் இருப்பது தெரியவந்துள்ளதால் தொடக்கக்கல்வி இயக்ககம் ஆசிரியர்களின் விவரங்களைக் கேட்டுள்ளனர்.