பளை பேருந்து விபத்தில் தொடரும் சோகங்கள்…

0
249

கிளிநொச்சி – பளை முல்லையடி பகுதியில் கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த 6 வயது சிறுவனின் ஒரு கை துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி மாலை திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து சாரதி வீதியில் பந்தயத்திற்குச் சென்றிருந்தமையினால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கல்வி வலயத்தின் யாழ்.சாவகச்சோி – அரசடி பிரதேசத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தரான ஜீவானந்தம் சுகிர்த்தினி (வயது-32) உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

திருகோணமலை முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த ரொட்மன் ரொணிக் ரொபின் (6 வயது) என்ற காயமடைந்த சிறுவனே இரண்டு கைகளிலும் காயம் ஏற்பட்டு ஒரு கை துண்டிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here