முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை நுகேகொட பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடகோட்டே பகுதியில் நேற்று (பிப்ரவரி 22) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 5 கிராம் 560 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.31 வயதான சந்தேக நபர் ராஜகிரிய நாவல வீதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விசாரணைகளின் போது தெரிவித்த தகவலின் அடிப்படையில் தலங்கம, கடுவெல, கிராண்ட்பாஸ், மிரிஹான, கொழும்பு கோட்டை மற்றும் கிரிபத்கொட ஆகிய பகுதிகளில் திருடப்பட்ட 05 முச்சக்கர வண்டிகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.அவர் இன்று (பிப்ரவரி 23) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.