கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு நாளை (மார்ச் 25) 10 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
காலை 11.00 மணி முதல் நீர் வெட்டு நீடிக்கும். இரவு 9.00 மணி வரை திட்டமிடப்பட்ட அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக அம்பத்தளையில் உள்ள துலுமங் பம்ப்ஹவுஸிற்கான மின்சார விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
நாளை 10 மணி நேர நீர்வெட்டினால் பின்வரும் பகுதிகள் பாதிக்கப்படும்.கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே மற்றும் கடுவெல நகரசபை பகுதிகள்
மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபை பகுதிகள்
கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபை
இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்கள்.