செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபல கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த சந்தேகநபர் கைது!

பல கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த சந்தேகநபர் கைது!

Published on

spot_img
spot_img

பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான அரச பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நபர் ஒருவர் பல கடவுச்சீட்டுக்களை நபர்களிடம் பெற்று வருவதாக பொலிஸ் விசேட பிரிவு பொறுப்பதிகாரிக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

இதற்கமைய சம்பவ இடத்திற்கு நேற்று (23) கல்முனை தலைமையக பொலிஸார் வருகை தந்து சுற்றி வளைத்து தேடுதல் ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி பகுதியை சேர்ந்த 51 வயது மதிக்கத்தக்க மைக்கல் மணிமேகலன் என்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் என கூறி சிலரிடம் பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டுக்களுடன் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் வங்கி கணக்கின் ஊடாக பலரிடம் பணக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.மேலும் சந்தேக நபர் வசம் இருந்த கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இவ்வாறு வரவழைக்கப்பட்டவர்கள் அனைவரும் நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் தமது கடவுச்சீட்டுக்களை சந்தேக நபரிடம் மத்திய கிழக்கு வேலைவாய்ப்பிற்காக வழங்கியதாகவும் அதற்காக சந்தேக நபரின் வங்கி கணக்கிற்கு பெருந்தொகையான பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ஆலோசனையின் அடிப்படையில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையில் பொலிஸ் குழுவினர் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் வாக்குமூலங்களை பெற்றுள்ளதுடன் கைதான சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்புகின்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரா அல்லது இடை தரகரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest articles

உயிரிழந்த ஹமாஸ் படைத் தளபதி ….

மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

மன்னர் சார்லஸுன் படத்துடன் வெளியாகும் பிரித்தானிய பணம்….

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லஸுன் படத்துடன்...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் இந்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. குரோதி வருடத்திற்கான பலன் இந்த ஆண்டு...

இலங்கையை வந்தடைந்த‌ கிரிஸ்டல் செரினிட்டி சொகுசு கப்பல்……

இன்று (13) காலை கிரிஸ்டல் செரினிட்டி என்ற சொகுசு கப்பல் இந்தோனேசியாவிலிருந்து 265 பயணிகள் மற்றும் 480 பணியாளர்களுடன்...

More like this

உயிரிழந்த ஹமாஸ் படைத் தளபதி ….

மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

மன்னர் சார்லஸுன் படத்துடன் வெளியாகும் பிரித்தானிய பணம்….

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லஸுன் படத்துடன்...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் இந்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. குரோதி வருடத்திற்கான பலன் இந்த ஆண்டு...