பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த 11 வயது சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (மார்ச் 05) பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.