நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் உள்ள மருத்துவமனையில் காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திரு. பர்வேஸ் முஷாரஃப் காலமானபோது அவருக்கு வயது 79.
1999-ம் ஆண்டு ரத்தம் சிந்தாமல் ஆட்சியைக் கைப்பற்றிய ஜெனரல் பர்வேஸ் முஷாரப், பாகிஸ்தானில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்.
முன்னாள் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப், உறுப்புகளை சேதப்படுத்தும் அரிய நோயான அமிலாய்டோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டார்.