கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகள் பரீட்சை அனுமதி பத்திரத்தில் உள்ள விபரங்களை திருத்துவதற்கு வழங்கப்பட்ட காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.
இதனால், பரீட்சை அனுமதி பத்திரத்தில் பெயர், பாடநெறி, ஊடகம் மற்றும் பிறந்த திகதி என்பனவற்றில் ஏதேனும் தவறு இருப்பின் அதனை இணையவழி ஊடாக திருத்தம் செய்ய முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.