நடிகையும் மாடலுமான, ரிஷ்டா லபோனி ஷிமானா மூளைச்சாவு அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சின்னத்திரை நடிகையும் மாடலுமான ரிஷ்டா லபோனி ஷிமானா, கடந்த 2006 ஆம் ஆண்டு ‘லக்ஸ்-சேனல் ஐ சூப்பர் ஸ்டார் என்கிற பெயரில் நடத்த பட்ட போட்டியின் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டார்.
இதை தொடர்ந்து, ஒரு சில திரைப்படங்களில் சப்போர்டிங் ரோல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். பல சீரியல்களிலும் நடித்து இல்லத்தரசிகள் மனதை கொள்ளை கொள்ளை கொண்டார்.
2014 ஆம் ஆண்டு பிரபல பாடகர் பர்வேஸ் சசாத்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் 2016 ஆம் ஆண்டு, குழந்தை பெற்ற பின்னர், திரைத்துறையில் இருந்து விலகினார்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற ரிஷ்டா லபோனி ஷிமானா… தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையி மே 21 அன்று இரவு ஷிமானாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது, டாக்காவின் தன்மோண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர், அடுத்த நாள் சிறந்த சிகிச்சைக்காக தன்மோண்டியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து மிகவும் ஆபத்தான நிலையிலேயே இருந்த ரிஷ்டா லபோனி ஷிமானாவை காப்பாற்ற மருத்துவர்கள் பல சிகிச்சைகள் மேற்கொண்ட பொதும் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் இவரின் மறைவுக்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.