Homeஇலங்கைபயண பொதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவல்

பயண பொதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவல்

Published on

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிதிகொட பிரதேசத்தில் கடந்த 15ஆம் திகதி நீல நிற பயணப்பைக்குள் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய, சிதைந்த நிலையில் காணப்பட்ட ஆண் நபரின் சடலம் மாரவில பிரதேசத்தில் போலி ஆவணம் தயாரிக்கும் வேலைவாய்ப்பு முகவருடையதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் பல்வேறு நபர்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பலரிடம் பணம் மோசடி செய்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய நபர்களுக்கு பயந்து வசிப்பிடத்தை விட்டுத் தப்பிச் சென்றவர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தடுகம் ஓயா கிதிகொட பாலத்தின் பயணப்பையில் கிடந்த சடலத்தில் தலை மற்றும் பல இடங்களில் பலத்த காயங்களுடன் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீண்ட கூந்தலுடன் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இறந்த நபர், பழுப்பு நிற காற்சட்டை மற்றும் கருப்பு சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Latest articles

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

More like this