இரத்தினபுரியில் பயணிகளை ஏற்றிச் சென்ற இ.போ.சக்கு சொந்தமான பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இரத்தினபுரி – சிறிபகம வீதியில் இந்துருவ – மஹவங்குவாவிற்கு அருகில் பஸ் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பேருந்தில் பயணித்த 28 பேர் காயமடைந்து கிளிமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், படுகாயமடைந்தவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.