Homeஉலகம்பனாமா-கொலம்பியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்

பனாமா-கொலம்பியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்

Published on

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பனாமா-கொலம்பியா எல்லையின் அருகே உள்ள கரீபியன் கடலில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சுமார் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பனாமாவின் போர்டோ ஒபால்டியாவிலிருந்து வடகிழக்கே 41 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில், இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகள் மற்றும் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் உயிர்சேதங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

இதனிடையே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 9 நிமிடங்களில் மீண்டும் அதேபகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது.

Latest articles

பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் மூன்று கான்ஸ்டபிள்கள் படுகாயம்

கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியப் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவில்...

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து...

வைத்தியர் முகைதீன் கொலை வழக்கு – மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

வவுனியாவில் வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை...

744 சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வந்த கப்பல்

இந்திய சுற்றுலா பயணிகள் 744 பேருடன் உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் (IMO-8716899)...

More like this