பனாகொட இராணுவ முகாமில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவருக்கு வழங்கப்பட்ட 03 மகசீன்கள் மற்றும் 90 தோட்டாக்கள் அடங்கிய டி-56 துப்பாக்கியை திருடிய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு பிரிவினரால் நேற்று (மார்ச் 15) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர்களில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவரும், முன்னாள் இராணுவச் சிப்பாய் தலைமறைவாக இருந்தபோது அவருக்கு உதவிய இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் அடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ சிப்பாய் மித்தெனிய பிரதேசத்தை வசிப்பிடமாகவும், இராணுவ சார்ஜன்ட் வெயங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்கள் இன்று (மார்ச் 16) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.