பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூரி மாப்பாக்கலை தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தீ விபத்து நேற்று (25.09.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 லயன் அறைகளைக் கொண்ட இந்த தொடர் குடியிருப்பில் ஏற்பட்ட விபத்தினால் 6 வீடுகள் முற்றாகவும் 3 வீடுகள் பகுதியளவிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 36 நபர்களை மாப்பாக்கலை ஞானவாஹினி தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த தீ விபத்தினால் உடமைகள் நாசமடைந்துள்ளதுடன் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீயை பதுளை தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.