பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொகுபோதாகம பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் இந்த வார தொடக்கத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பதுளை ரில்பொல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
57 வயதான அவர் திங்கட்கிழமை (பிப்ரவரி 27) வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், அவர் திரும்பி வராததால் அவரது சகோதரி பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்தார்.பின்னர் அவசர தொலைபேசி இலக்கமான 119 ஊடாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காணாமல் போனவரின் சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைகளை அடுத்து தற்போது பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.